மக்களின் கருத்துகளுக்கு செவிசாய்க்காமை பாரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே சகல கட்சிகள் மற்றும் அமைப்புகளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டே தேர்தல் ஆணைக்குழு குறித்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளது.