Skip to content
- ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான கோஷங்களை எழுப்பிக்கொண்டு மக்கள் சாரை சாரையாக காலி முகத்திடலை நோக்கி படையெடுக்கின்றனர்.
- பெரும்பாலானவர்கள் தேசிய கொடியை ஏந்தியிருக்கின்றனர்.
- நந்தசேன என்று ஏழுதப்பட்டிருக்கும் பதாகைளையும் தாங்கி நின்றிகின்றனர்.
- “கோட்டா வீட்டுக்குப் போ” எனும் கோஷங்கள் காதை கிழித்துச் செல்கின்றன.
- கோட்டை, பொலிஸ் தலைமையகம், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட பிரதேசங்களில் இரும்புக் கம்பிக்களைக் கொண்டு வேலிகள் பின்னப்பட்டுள்ளன.
- நீர்கொழும்பு- கொழும்பு வீதியில் ஓர் ஒழுங்கை மூடப்பட்டுள்ளது. பெரும் திரளான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பை நோக்கி படையெடுத்து வருகுன்றனர்.
- மொரட்டுவை பகுதியிலிருந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வருகைதருகின்றனர்.
- கொழும்பில் பல பகுதிகளிலும் வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
- பேராதனைப் பல்கலைகழகத்தில் இருந்தும் மாணவர்கள் பஸ்களில் வருகின்றனர்.
- சைக்கிள்களின் ஓட்டம் அதிகரித்துள்ளது.
- பொலிஸ் வானங்களின் ரோந்து அதிகரித்துள்ளது.
- லொறிகளுக்குள் போராட்டக்காரர்கள் ஏற்றி வரப்படுகின்றனர்.
- பொதுப் போக்குவரத்துச் சேவைகள் முற்றாக ஸ்தம்பிதம். எனினும், தனியார் பஸ்கள் இரண்டொன்று சேவையில் ஈடுபட்டுள்ளன.
- அதிர்ஷ்ட இலாபச் சீட்டு கூடாரங்கள் திறந்துள்ளன.
- பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
- பெட்டிக்கடைகள் திறந்துள்ளன.
- மருந்தகங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளன
- மதுபானசாலைகளும் திறந்துள்ளமையை அவதானிக்க முடிந்தது
- நிர்மாணத்துறையில் பணியாற்றுபவர்கள் தங்களுடைய கடமைகளைச் செய்கின்றனர்.
- பட்டா ரக வாகனங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்றிவரப்படுகின்றனர்.
- போக்குவரத்துப் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- முக்கிய இடங்களில் ஆயுதம் தரித்த இராணுவத்தினர் கடமையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
- கடற்படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
- போராட்டக்களத்துக்கு பெருந்திரளானோர் நடந்தே வந்துகொண்டிருக்கின்றனர்.
- எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசைகள் குறைந்துள்ளன. சில இடங்களில் எரிபொருள் வரிசைகளே இல்லை