(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அது ‘சுனாமி’ மாதிரி, தொடர்ச்சியாகப் பல நாடுகளைத் தாக்கிய வண்ணமுள்ளது. பணவீக்கத்துக்கு ஆளாகும் ஒவ்வொரு நாட்டிலும், பொருளாதார சீர்கேடு உருவாக்குகிறது. இது பல சந்தர்ப்பங்களில் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு வழிசெய்கிறது.