(Ramasubramanian Subbiah)
கதிர்வீச்சும், தவளைகளின் பரிணாம மாற்றமும் :
“ஆய்வாளர்கள், செர்னோபில் கதிர்வீச்சு மண்டலத்தில் பரந்துள்ள, 12 வேவ்வேறு இனப்பெருக்கக் குட்டைகளில் (breeding zones) வாழும் 200 ஆண் தவளைகளைப் பிடித்து ஆய்வுசெய்தனர். கதிர்வீச்சு மண்டலத்திற்கு வெளியில் வசிக்கும் தவளைகளை ஒப்பிடும்போது, கதிர்வீச்சு மண்டலத்தில் ஆய்வுக்கு உட்படுத்திய தவளைகளில் 44 விழுக்காடு தவளைகள் கருமை நிறம்கொண்டவையாகக் காணப்பட்டன.
செர்னோபில் தடைசெய்யப்பட்ட மண்டலத்தில், தவளைகள் அப்படி நிறம் மாறியதற்கு ஒரே ஒரு விளக்கம்தான் இருக்கமுடியும் என்று ஆய்வுக்குழுவினர் கருதுகின்றனர். அதாவது, விபத்து நேர்ந்த பொழுதில், அங்கு நிலவிய மிகமிக அதிகமான கதிர்வீச்சு அளவை எதிர்கொள்ளவே, தவளைகளின் தோல் நிறங்கள் அப்படி கருமை நிறத்திற்கு மாறியிருக்கவேண்டும் என்று ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர்.
செர்னோபில் தவளைகளின் தோல்நிறம் கருமைக்கு மாறி, கதிர்வீச்சு விளைவிக்கும் பேரழிவுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொண்டது என்பது, நம் காலத்தில் நிகழ்ந்த பரிணாம மாற்றமே (evolution) என்று ஆய்வாளர்கள் உறுதியாக நம்புகின்றனர்