(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
வலதுசாரி தீவிரவாதத்தின் நிழலில் – 24
உலகின் பல்வேறு பிராந்தியங்களில் அதிவலதுசாரி, தனக்கேயுரிய தனித்துவமான குணவியல்புகளுடன் செயற்படுகிறது. இதற்கு ஆபிரிக்காவும் விலக்கல்ல! ஆபிரிக்க அரசியல் நிலப்பரப்பானது தீவிர வலதுசாரி சித்தாந்தங்களின் சொந்த வடிவங்களைக் கொண்டுள்ளது. இதற்கான சிறந்த உதாரணமாகக் சொல்லப்படுவது 1994ஆம் ஆண்டு ருவாண்டாவில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை.