தமிழில் எத்தனை எழுத்துகள்?

(இலங்கநாதன் குகநாதன்)


தமிழ் இலக்கணத்தின் அடிப்படை நூல் எது ? தொல்காப்பியம். தொல்காப்பியம் தமிழிலுள்ள எழுத்துகள் எத்தனை எனக் குறிப்பிடுகின்றது?
‘ எழுத்தெனப்படுவ அகர முதல் னகர இறுவாய் முப்பதென்ப ‘
: தொல்காப்பியம்
மேலே தொல்காப்பியமானது ‘எழுத்து’ எனச் சிறப்பித்துச் சொல்லப்படுவது ‘அ’ முதல் ‘ன்’ வரையிலான முப்பது எழுத்துகளே எனச் சொல்லுகின்றது.
உயிர் எழுத்துகள் 12
மெய் எழுத்துகள் 18
மொத்தம் 30.
ஃ என்ற எழுத்தின் ஒலியினைக் கூட ‘அக்’ எனச் சொல்லி விடமுடியும். இவ்வாறே உயிர் மெய் எழுத்துகள் 216 இனையும் சொல்லலாம்; காட்டாக, ‘க’ என்பதனை “க் + அ ” எனச் சொல்லலாம்.
‘எழுத்து’ என்ற சொல்லின் வேர்ச்சொல் ‘எழு’ என்பதாகும், அதாவது எழுப்பப்படும் ஒலியே எழுத்து ஆயிற்று ( பேச்சு மொழியிலிருந்தே எழுத்து மொழி). தமிழின் அடிப்படை ஒலி வடிவங்கள் முப்பதே. இவற்றினைச் சார்ந்து வருபவையே ஏனையவை. எனவே தமிழிலுள்ள எழுத்துகள் 30 மட்டுமே! அவற்றின் வடிவங்கள் வேண்டுமானால் 247 எனலாம். ஆங்கிலத்தில் கூட பெரிய எழுத்துகள், சிறிய எழுத்துகள், தொடர் எழுத்துகள் என 78 வடிவங்களுள்ளன, ஆனால் எழுத்துகள் எனும் போது 26 ஒலி வடிவங்களை மட்டும் தானே கூறுகின்றோம். அது போலவே தமிழிலும் முப்பது எழுத்துகளே! 247 எழுத்துகள் என அச்சுறுத்த வேண்டாம்!
🙏தமிழில் முப்பது எழுத்துகளே 🙏