பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாகண தணிக்கையின்போது காரை நிறுத்தாமல் சென்ற 17 வயதே ஆன ஆப்பிரிக்க வம்சாவளி சிறுவனை போலீஸார் சுட்டுக் கொன்ற நிலையில் அந்நகரம் முழுவதும் காவல்துறைக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன. அது வன்முறையாக வெடிக்க, தொடர்ந்து இரண்டாவது நாளாக பாரிஸ் நகரின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அமைதியை நிலைநாட்ட சுமார் இரண்டாயிரம் பொலிஸார் அங்கே குவிக்கப்பட்டுள்ளனர்.