கனடா நாட்டில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இந்தியா- கனடா நாடுகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வசித்து வரும் கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கு கனடா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் கனடா நாட்டினர் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு கனடா அரசு சமூகவலைதளம் மூலம் அறிவுறுத்தி இருக்கிறது.