சுதந்திர இலங்கையின் ஜனநாயகப் படுகொலை

றுப்பு யூலையின் நாற்பதாண்டுகளின் பின் 20  சுதந்திர இலங்கையின் ஜனநாயகப் படுகொலை

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

இலங்கையின் சுதந்திரம் மக்களுக்கானதாகவன்றி அதிகார வர்க்கத்தின் நலன் சார்ந்ததாகவே இருந்தது என்பதை சுதந்திரத்திற்கு பின்னதான முதற் தசாப்தகாலம் தெளிவாகக் காட்டி நின்றது. ஆனால் சுதந்திர இலங்கையின் இனவாதப் போக்கை வெளிப்படையாக காட்டுவதற்கு அதிக காலம் எடுக்கவில்லை.