செப்டம்பரில், IMF திட்டத்தின் வெளிப்படைத்தன்மை அதன் மிகக் குறைந்த நிலையை எட்டியது: வெரிட்டே ரிசர்ச்
உபதலைப்பு: இலங்கை முக்கியமான வேலைத்திட்ட மைல்கற்களைத் தவறவிட்டதால், வெளிப்படைத்தன்மையில் இரட்டைப் பற்றாக்குறையை ”ஆராய்ச்சி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் 17 வது திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 100 உறுதிமொழிகளைக் கண்காணிக்கும் இணையவழித் தளமான வெரிட்டே ரிசர்ச்சின் ”IMF கண்காணிப்பான்’ இன் சமீபத்திய புதுப்பிப்பு, 2023 செப்டம்பர் இறுதிக்குள் நிறைவெற்றப்பட வேண்டிய 71 கண்காணிக்கக்கூடிய உறுதிமொழிகளில் 40 ஐ மட்டுமே இலங்கை நிறைவேற்றியுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.