40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டசபைக்கு கடந்த மாதம் 7ம் திகதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. அம்மாநிலத்தில் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 21 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சி செய்கிறது. அம்மாநில முதல் மந்திரியாக ஜொராம்தங்கா செயல்பட்டு வருகிறார். அதேவேளை, சோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ், பாஜக உள்ளிட்டவை முக்கிய எதிர்க்கட்சிகளாக திகழ்கின்றன.