ஈழத் தமிழருக்கு தொடரும் துயரம்….

சென்னை கும்மிடிப்பூண்டி ஈழ அகதிகள் முகாமைச் சேர்ந்த சுபேந்திரன் வயது 38 -ஐ ,கடந்த 23/02/16 அன்று கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையம் கூட்டிச்சென்ற , ஆய்வாளர் டில்லி பாபு அவரை அடித்து, உதைத்து கால்களை முறித்து விரட்டிவிட்டார். இந்த ஆய்வாளர் ஏற்கனவே ஒழுங்கற்ற நடவடிக்கை காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவராம்..


அன்றே ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , சிகிச்சை பெற்றார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார். இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் , மேற்படி புகார்களை வாபஸ் பெற வேண்டும் என போலீசார் தினசரி சுபேந்திரன் மற்றும் அவரது மனைவி தர்சிணி ஆகியோரை கடுமையாக மிரட்டி வருவதாக தெரியவருகிறது. கடும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்..

போலீசார் சுபேந்திரனை அடித்ததை முகாமைச் சேர்ந்த கண்ணன், உமேசுவரன் மற்றும் சுபேந்திரன் மனைவி தர்சிணி ஆகியோர் நேரில் பார்த்து பதறி உள்ளனர். சுபேந்திரனின் இரு கால் முட்டிகளும், கணுக்கால்களும் எலும்பு முறித்து உடைக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டவர்கள்
செத்த பிறகு மாலை போடுவதால் பலனில்லை..சாகும் முன்பு காப்பதுதான் சரியானது..

என்ன செய்ய செய்யலாம் இதற்காக ???