2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி கருணா பிரிவின் பின் வன்னியில் இருந்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையெடுப்பில் முதலாவது சமர் ஆரம்பித்த இடமாக மட்டக்களப்பு வாகரை வெருகல் மலை அமைந்துள்ளது. இலங்கை தீவில் நடந்தேறிய ஒரு வெலிகடை படுகொலை போல, ஒரு கொக்கட்டிச்சோலை படுகொலை போல, ஒரு குமுதினிப்படகு படுகொலை போல, ஒரு கந்தன் கருணை படுகொலை போல, வெருகல் படுகொலையும் கிழக்கு மக்களின் நெஞ்சங்களைவிட்டு இலகுவில் அகன்று விடாதவொன்றாகும்.
தமிழீழ விடுதலைபுலிகளில் பாதிக்குமேல் கிழக்கு போராளிகளே இருந்தார்கள். இறந்த மாவீரர்களில் கிழக்குமாகாண போராளிகளே அதிகளவில் இருந்தார்கள்.
“வடக்கு பகுதியினர் பெருன்பான்மையோர் வெளிநாடுகளுக்கு ஓட, கிழக்கு போராளிகள் வடக்கு நோக்கி ஈழ விடுதலை கனவுடன் பிரபாகரனை நோக்கி ஓடினர். அதற்க்கு பிரபா கொடுத்த பரிசு இந்த வெருகல் படுகொலை,
அந்த மண்ணைக் காத்தார்கள்.LTTE யின் முதுகெலும்பு கிழக்கு போராளிகளை கொண்ட ஜெயந்தன் படையணி (ஜெயந்தன் படைபிரிவு தளபதி கருணாம்மான்) , இவர்கள் இல்லாதுவிடின் தமிழீழ விடுதலை புலிகளின் வெற்றி வரலாறுகளெல்லாம் வேறுமாதிரியே எழுதப்பட்டிருக்கும்.
=============================
ஏன் கருணா பிளவு நிகழ்ந்தது..?
==========================
LTTE பயங்கரவாதிகள் துரோகி கருணா என்ற ஒற்றை நபரை குற்றம் சாட்டி கிழக்கு போராளிகள் பிளவை மூடி மறைக்கின்றனர், ஆனால் கருணா பிரபாகரனை விட்டு எளியேற வேண்டும் என்று கிழக்கு போராளிகள் ஜெயந்தன் படையணி தொடர்ந்து நிபந்தம் செய்தனர், காரணம் இல்லாமல் இல்லை, கிழக்கு பகுதி போராளிகள் போராட்டகளத்தில் ஒரு ரோபோ போல பயன்படுத்தினர்,முன்னரங்கு காவல் நிலைகளில் கிழக்கு போராளிகள் கிடக்க வடக்கு பகுதியினர் பெரும்பாலும் தளபதிகளாக பிக்கப் ட்ரக்கில் வளம் வந்தனர், கருணா பெற்றோர்களிடம் இருந்து வலுகட்டாயமாக பிள்ளை பிடி செய்து சேர்த்த படையே ஜெயந்தன் படையணி, பெரும்பாலும் சிறுவர்களை கொண்டது, பிரபா படைக்கு ஆள்செர்து கொடுக்கும் கருணாவுக்கு மட்டும் பிரபாவிடம் இருந்து மரியாதைகள் குவிந்தன, ஆனால் மற்ற தளபதிகளுக்கு கருணாவை பிடிக்காது முக்கியமாக பொட்டுவுக்கு,
யானையிறவு சண்டை வெற்றிக்கி களத்தில் நின்றது கருணா படை ஆனால் வெற்றி பெற்றபின் கொடியேற்றம் நிகழ்வில் கருணாவிற்கு பதிலாக பால்ராஜ் முன்னிலை படுத்தபட்டார், பால்ராஜை விட கருணாவே அந்த சண்டையை நடத்தியவர், ஆனால் LTTE ஊடகங்கள் பால்ராஜ் தான் மஸ்தான் பிஸ்தா என்றன, இது கருணாவை விட களத்தில் நின்ற கிழக்கு போராளிகள் மனதில் சினத்தை உண்டு பண்ணியது,
அடுத்த முக்கிய நிகழ்வு 2002ம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் வந்தபோது உருவாக்கப்படவிருந்த இடைக்கால நிர்வாகத்துக்காக தெரிவான 32 துறை செயலாளர்களில் ஒருவரை கூட கிழக்கு மாகாணத்திலிருந்து நியமிக்கும் அளவிற்கு அவர்களின் நெஞ்சில் ஈரம் இருக்கவில்லை. அதை கருணாவிடம் அவரின் தளபதிகள் முறையிட்டனர், நாம் போராடும் பொழுதுகளில் எம்மை பாராட்டினார்கள், மட்டக்களப்பு வீரம்விளைநிலம் என்று சான்று தந்தார்கள். எமது கல்லறைகளில் தென்தமிழீழத்து மாவீரன் என்று கல்வெட்டு எழுதினார்கள்,
ஆனால் நாம் எமது உரிமைகளை கேட்ட மாத்திரத்தில் ஒரே நாளில் துரோகிகளாக்கப்பட்டோம். அப்படிஎன்றால் பிரிந்து செல்வோம் என்றார்கள். விளைவு கருணா பிரிவுபடையெடுத்து வந்து படுகொலைகளை கட்டவிழ்த்து விட்டார்கள்.
இதே மண்ணில் அந்த வெருகலாற்று படுக்கையில் யுத்த பேரிகை முழங்கியது. சரணடைந்த கிழக்கு போராளிகள் மீது படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்டது. “ஐயோ அண்ணா வேண்டாம் வேண்டாம்” என்று பெண் போராளிகளின் அவலக்குரல் கதிரவெளி கடலோரமெங்கும் எதிரொலித்தது.
==================================
ஜெயந்தன் படையணி இல்லாதுவிடின், புலிகளின் வெற்றி வரலாறுகளெல்லாம் வேறுமாதிரியே எழுதப்பட்டிருக்கும்: -பிள்ளையான்!! (வெருகல் படுகொலை நினைவு தின -10.04.2014- உரை )
ஜெயந்தன் படையணி இல்லாதுவிடின் தமிழீழ விடுதலை புலிகளின் வெற்றி வரலாறுகளெல்லாம் வேறுமாதிரியே எழுதப்பட்டிருக்கும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
ஒஸ்லோ உடன்படிக்கையையும் 2002 சமாதான ஒப்பந்தத்தையும் கிழித்தெறிய வழிசமைத்த முதலாவது யுத்தநிறுத்த மீறல் தமிழீழ விடுதலை புலிகளால் நடாத்தப்பட்ட இந்த வெருகல் படுகொலையேயாகும் என சர்வதேசத்துக்கு பறை சாற்றுன்றேன் எனவும் இதன்போது அறைகூவல் விடுத்தார்.
இன்று வெருகலில் நடைபெற்ற வெருகல் படுகொலை நினைவு தினத்தின் நினைவுரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.