(தோழர் ஜேம்ஸ்)
பல தேசிய இனங்கள் மதங்கள் மாநிலங்கள் என்றாக உலகின் அதிக சனத் தொகை உள்ள நாட்டின் தேர்தலை உலகம் உற்று நோக்கியிருந்தது.
ஆளும் பாஜக கட்சியின் எதேச்சேகார இந்துவத்துவா கோட்பாடும் ஒரே தேசம் ஒரே மதம் ஒரே தேர்தல் ஒரு கட்சி என்றாக பல தேசிய இனங்களின் அபிலாசைகளை மறுதலிக்கும் மாநிலங்களின் சுயாட்சியை உரிமைகளை பறிக்கும் செயற்பாடாக பயணித்த 10 வருட ஆட்சியிற்கு ஒரு மூக்கணாங்கயிறு போடப்பட்டுவிட்டதாக உணரும் தேர்தல் முடிவுகள் வந்துள்ளது.