இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்கால் வரை பயணித்தவர்கள் வரலாற்றின் புதல்வர்கள்!- பொன்காந்தன்
2009ம் ஆண்டு கொடூரமான இனப்படுகொலை நடந்த முள்ளிவாய்க்கால் பிரதேசம் வரை பயணித்த அனைத்து தமிழ் மக்களும் வரலாற்றின் புதல்வர்கள் என கவிஞர் பொன்கந்தன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி ஜெயக்குமரன் எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழல் ‘ (போராட்ட குறிப்புக்கள்) மற்றும் ‘போர்க்காலம்’ (கவிதை தொகுப்பு) ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் தலைமை தாங்கி உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில்இ
விடுதலைப் போர் தொடர்பாக தலைவர் வே.பிரபாகரன் முன்னே கைநீட்டும் அதிகாரமும் வலிமையும் தமிழ் மக்கள் அனைவருக்கும் உண்டு.
ஏனெனில் அவர் எங்கள் தலைவன் என்பதால். அதேபோல் தமிழினிக்கும் உண்டு. தமிழினி அதை செய்திருக்கின்றார். அதன் வெளிப்பாடுதான் இந்தநூல்
தலைவர் பிரபாகரனை நோக்கி கைநீட்ட முடியாவிட்டால் அவர் ஒரு சர்வாதிகாரியாகி விடுவார். தமிழினி கேள்விகள் கேட்டு தலைவர் பிரபாகரன் சர்வாதிகாரி இல்லையென்பதை நிருபித்துள்ளார்.
இறுதிக்கட்ட போரின் போது முள்ளிவாய்க்கால் வரை செல்வது என்பது ஒரு தமிழனுக்கு கிடைத்த வாய்ப்பு. தமிழ் மக்கள் வரலாற்றை திரும்பிப் பார்ப்பதற்கும் தம்மை சுய பரிசோதனை செய்து கொள்வதற்கும் மீண்டும் செப்பனிடுவதற்கும் முள்ளிவாய்க்கால் பயணம் என்பது அவசியமானதொன்று.
ஆகவே முள்ளிவாய்க்கால் வரை சென்ற ஒவ்வொரு தமிழனும் வரலாற்றின் புதல்வர்கள் என்று கூறினார். ஆமாம், புலிகளால் பணயக் கைதிகளைப் போலத்தான் தமிழ் மக்கள் முள்ளி ;றிவாய்க்கால் வரை கடத்திச் செல்லப்பட்டார்கள். புலிகள் தமக்கான மனிதக் கேடயங்களாகத் தான் தமிழ் மக்களை உபயோகித்தார்கள். எனவே முள்ளிவாய்க்கால் வரை சென்ற ஒவ்வொரு