காத்தாடியாகி மரணிக்கும் ‘குஷ்’ க்கள்

உணவுத் தட்டுப்பாட்டைத் தடுக்கவும் கொரோனா காலத்தில் மரக்கறிகளை தேடி வீடுகளில்இருந்து வெளியேறாமல் இருப்பதற்காகவும், வீட்டுத் தோட்டக்கலையை அரசாங்கம் ஊக்குவித்தது. அதில், தங்களை அர்ப்பணித்தவர்கள், இன்னும் பயிரிட்டுக்கொண்டுதான் இருக்கின்றனர். பலரும் கைவிட்டுவிட்டனர். எனினும், மரக்கறிகளின் விலை உயரும் போது ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்பதற்கு இணங்க மண்ணை பதப்படுத்துவர்.