‘பிரக்ஞான் ரோவரின்’ புதிய கண்டுபிடிப்பு

நிலவில் 160 கி.மீ., அகலமுள்ள பள்ளம் இருப்பதை, சந்திரயானின் பிரக்ஞான் ரோவர் கண்டுபிடித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அனுப்பிய, சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘விக்ரம் லேண்டர்’, நிலவின் தென் துருவத்தில், கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் திகதி தரை இறங்கியது.