எண்பதுகளின் நடுப்பகுதிகளிலிருந்து புலிகளிலிருந்த…….

எண்பதுகளின் நடுப்பகுதிகளிலிருந்து புலிகளிலிருந்த வெள்ளாள மற்றும் கரையார, தலித் சாதிகள் அல்லாத கோவியர் முதலிய இடைநிலைச்சாதிகள் வெளியேறினார்கள். இப்படி வெளியேறியவர்கள் 3000 வரை இருக்கும் என்று கிட்டு பிரபாகரன் Biography எழுதிய நாராயன் சுவாமியிடம் சொன்னது Tigers of Lanka என்ற பத்தகத்திலுள்ளது. தகுதி மற்றும் சீனியோறிற்றி அடிப்படையில்
தங்களுக்கு கிடைக்கவேண்டிய பதவி கிடைக்காததாலேயே இவர்கள்
வெளியேறினார்கள். 50 வீதமான யாழ் சமுக வெள்ளாளர் இயக்கத்தில்
செல்வாக்காவதை பிரபாகரன் விரும்பவில்லை. அவர்கள் வெளியேறுவது ஊக்கிவிக்பட்டது.


வெள்ளாளர் செல்வாக்கில்லாத கிழக்கு மாகாணத்தில் கருணா கட்டாய ஆட்சேர்ப்பு செய்வதை ஊக்குவித்த பிரபாகரன் யாழ் குடாநாட்டில் கட்டாய ஆட்சேர்ப்பை அனுமதிக்காததும் சைவவேளாள யாழ் மையவாத தன் சித்தாந்தத்திற்கிசைவாகவும் கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் வெள்ளாள மற்றும் கோவியர்(7 வீதம்) முதலிய சாதிகள் இயக்கத்துக்குள் வருவது தனது அதிகார அடிப்படையை ஆட்டங்காண
வைக்கும் என்பதாலேயே. அப்படி வெளியேறிவர்கள் வெளியிலிருந்தோ வெளிநாடுகளிலிருந்தோ புலிகளுக்காக வேலை
செய்வதையே புலிகள் விரும்பினார்கள். அப்படி வெளியேறிய முக்கியமானவர்கள்
1. நிலாந்தன்
2. Nadarajah Muralitharan
3. ரகீம்
4. சுக்ளா
5. இளங்கோ( கனடா)
6. கேணல் பருதி
7. சிவரஞ்சித்
8. Gowripal Sastri Sri
9. நிலாந்தனின் சொந்த தம்பியான மகா என்ற இப்போது ஐரோப்பாவிலிருக்கும் ஓவியர். (இவர்தான் புலிகளிலிருக்கும்போது
கிட்டுவின் கொலை குழுவில்போய் சிறிசபாரத்தின் மீது
குண்டுபாச்சி கொன்றதாக தான் கேள்விப்பட்டதாகவும் எனினும் தன்னால் இதை உறுதிப்படுத்தமுடியவில்லை என்றும் Shobasakthy என்னோடான ஒரு தொலைபேசி உரையாடலில் சொன்னார்.

இப்டி வெளியேறியவர்கள் புலி பொன்முட்டை போடும் வாத்து என்பதை அறிந்ததால் அதனை வைத்து பிழைக்க முன்வந்தார்கள். புலிகளின் சர்வதேச பொறுப்பாளர்களாக இருந்த கே.பி, கிட்டு, திலகர், காஸ்றோ ஆதிய அனைவுரும் கரையார்கள். ஆனால் வெளிநாட்டு சனத்தொகை யதார்த்தை உணர்ந்து வெள்ளாள தலைவர்களே தனித்தனி நாட்டு தலைவர்களாக தலைப்பாகை கட்டப்பட்டார்கள்.

நிலாந்தன் அறம்,உண்மை,மறம் என்பவற்றுக்கு மதிப்புக்கொடுக்காத ஊடக யாவாரி என்பதை நான் அறிந்தது பின்வரும் 2 விடயங்களில்.
1. நிலாந்தன் திருமணம் செய்தது யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளை அதிகாரத்தை பயன்படுத்தி வல்லுறக்குட்படுத்திய
க. அருந்தாகரனின் உறவுப்பெண்ணை. நான் யாழ்பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பேராசிரியர்களால் நடத்தப்படும் பாலியல் குற்றங்களை அம்பலப்படுத்தி எழுதிய கட்டுரையைப் படித்த நிலாந்தன் என்னுடனான ஒரு தொலைபேசி உரையாடலில் அருந்தாகரன் அப்படிப்பட்ட கிரிமினல் இல்லையென்றும் அவரை எதிரிகளான தீபச்செல்வன் முதலியோர் ஓரங்கட்ட இப்படி
அவதூறுகளை பரப்புகிறார்கள் என்றும் சொல்லி என் மனதை மாற்ற முயன்றார். இதற்குமுதல் நிலாந்தன் பிரபாகரனின் மெய்பாதுகாப்பு அணியிலிருந்து வெளியேறி இப்போது எழுத்தாளராக இருக்கும் ஒருவரிடமும் அருந்தாகரன் பற்றி நான் எழுதியது பிழை
என்று வதந்தி பரப்பினார்.

2. IPKF காலத்தில் மண்டையன் குழு தலைவராக
இருந்து மாபாதக சித்ரவதைமூலம் புலி சந்தேக நபர்களை வதையாடி
கொன்ற சுரேஸ் பிரேமச்சந்திரன் நிலாந்தனின் அரசியல் வர்த்தக பங்காளி. தேசம்நெற் ஆசிரியர் Jeyapalan சுரேசின் கொலைவரலாற்றை அம்பலப்படுத்திய போது அதற்கு ஆதாரம் இருக்கா என்று inbox வழி
தொடர்புகொண்டு அதற்கு ஆதாரமிருக்கா என்று கேட்டார்.

சுரேஸ் பிரேமச்சந்திரன் 2009 மே க்கு பிறகு TNA ல் தன் செல்வாக்கை நிலைநிறுத்த ஆட்சேர்க்க முற்பட்டபோது நிலாந்தனை வடமாகண சபை தேர்தலிலோ பிறகு பாராளுமன்ற தேர்தலிலோ TNA சார்பாக வேட்பாளராக வருமாறு நிலாந்தனை அழைத்தார். ஏனோ நிலாந்தன் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சுரேசுக்கு ஒரு கல்லில் இரண்டு மாங்காய். தன்மோகி(Narcissist)நிலாந்தன் அன்றிலிருந்து Suresh லாபியிஸ்ட்.

(Arun Ampalavanar)