பற்குணம் படிக்கப் போகும் காலத்தில் வழியில் சிலர் வழிமறித்து வம்பு சண்டைக்கு இழுத்தவரகளும் உண்டு.கேலி கிண்டல் பண்ணியவர்களும் உண்டு.எங்கள் குடும்ப வறுமைக்குள் இவர்களுக்கு படிப்பு தேவையா எனக் கேட்டவர்களும் உண்டு.அவர்களே இப்போது வியப்போடு ஆச்சரியப்பட்டு அண்ணனைப் பாராட்டினார்கள். அம்மா ஆஸ்பத்திரியில் இருந்த காலங்களில் அம்மாவிடம் சில நகைகள் இருந்தன.அவற்றை விற்றே வாழவேண்டிய சூழ்நிலையில் எங்கள் குடும்பம் இருந்தது. நிலைமை புரிந்தாலும் அம்மாவுக்கு அதில் உடன்பாடில்லை .அய்யாவிடம் இதை தடுக்க முயன்றார்.அப்போது அய்யா சொன்னாராம் பிள்ளைகளின் படிப்புக்கும் சாப்பாட்டுக்கும் உதவாத நகையுன் பணமும் எதுக்கு என்றாராம்.
அண்ணன் பற்குணம் பல்கலைக்கழகத்துக்கு தெரிவானபோதே அய்யாவின் உழைப்பையும் தெளிவான நோக்கத்தையும் புரிந்து கொண்டார்.பிற்காலத்திலும் அம்மா அதை சொல்லி வருந்தினார்.எவ்வளவு வசதி இருந்தாலும் இப்படி ஒரு கௌரவம் கிடைத்திருக்காது என்பார்.
பற்குணம் பல்கலைக்கழகம் தெரிவானபோது அவரது சாஸ்திரகார நண்பர் கணேசபிள்ளை தெரிவாகவில்லை .ஆனாலும் மனமுவந்த சந்தோசம்,மறுபுறம் தன் சாஸ்திரம் உண்மையான சந்தோசத்துடன் வந்து வாழ்தினார்.அவர் மறுவருடம் தெரிவானார்.
அண்ணன் பற்குணம் பல்கலைக்கழகம் தெரிவான சந்தோசம் ஒரு புறம்.மறுபுறம் எப்படி படிப்பைத் தொடர்வதை என்பது கேள்வியாக இருந்தது. எங்களிடம் நிலவளம்,பொருளாதாரம் வளம் எதுவும் இல்லை.இரண்டு துண்டு காணிகள் மட்டும் இருந்தன.உறவுகள் எவரின் உதவிகள் இல்லை.இதன் காரணமாக மீண்டும் பற்குணம் படிப்பைத் தொடர தயங்கினார்.அவரைப் பொறுத்தவரை எதற்கும் யாரிடமும் கையேந்துவது பிடிக்காது.இதனால் பிடிவாதமாக மறுக்கத்தொடங்கினார்.
இப்பொழுது அம்மா உசாராக எழுந்தார்.நீபடி.நாங்கள் முயற்சிப்போம்.அய்யாவும் விடுவதாக இல்லை.இந்நிலையில் ஊருக்குள் ஒரு செய்தி பரவியது. அண்ணன் படிப்பு செலவுக்காக வாசிகசாலை சார்பாக நடராசா பணம் சேர்க்க முயற்சிக்கின்றார்.இதை அறிந்த அண்ணன் உடனேயே போய் வாசிகசாலை முன்பாக நான் ஊர் காசில் படிக்க விரும்பவில்லை .யாரும் என் பெயரால் பணம் சேர்த்தால் கொடுக்க வேண்டாம்.நானும் என் குடும்பமும் வாங்க மாட்டோம் என தெரிவித்தார்.
இதானால் நடராசாவுக்கு அசௌரியமாக போய்விட்டது.பல விசயங்களில் விமர்சனங்களை சந்தித்தவர்.இதன் மூலம் அண்ணனை தன் கீழே கொண்டுவர முயன்று தோல்விகண்டார்.
சிலர் அண்ணனின் எச்சரிக்கை முயற்சியை பாராட்டினார்கள்.எதுவுமே அற்ற நிலையிலும் அய்யாவும் அம்மாவும் மனம் தளரவில்லை .உண்மையில் தங்களால் முடியும் என நம்பினார்கள்.
(விஜய பாஸ்கரன்)
(தொடரும்….)