எங்கள் பெரிய அண்ணன் திருமணமாகி அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.எங்கள் குடும்பத்தில் அம்மா வழியிலும் சரி,அய்யா வழியிலும் குடும்பத்துக்கு ஒரு பெண்பிள்ளைதான்.ஆனால் எங்கள் குடும்பத்தில் எல்லோரும் ஆண்பிள்ளைகள் .அந்த பெண்பிள்ளை வெற்றிடத்தைப் மாமா மகள் ராணி என்பவள் நிரப்பினாள்.இதன் பின் எங்கள் குடும்ப வாரிசாக பெண் பிள்ளையாக அண்ணன் மகள் பிறந்தாள்.இவள் மீது பற்குணம் மிகுந்த அன்பு செலுத்தினார்.அதே போலவே அவளும் சித்தப்பா என மிகுந்த பாசம் வைத்திருந்தாள்.
அண்ணன் பல்கலைக்கழகம் தெரிவானபோது அண்ணன் தானாக வந்து உதவுவான் என அம்மா அய்யா எதிர்பார்த்தார்கள்.அவரோ எட்டியும் பார்க்கவில்லை .அப்போது அவர் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.அம்மா அதிகம் படிக்காவிட்டாலும் குடும்பம் என்பது தனியான ஒன்று.அவரகளிடையே மற்ற யாரும் மூக்கை நுழைக்க கூடாது என்ற கொள்கை உடையவர்.கூட்டுக் குடும்பம் என்பதை அந்த நாட்களிலேயே நிராகரித்தவர்.இதனால் பெரிய அண்ணனிடம் எதையும் கேட்க விரும்பவில்லை .அய்யாவிடமும் கண்டிப்பாக சொல்லிவிட்டார் .ஆனால் மகன் என்ற முறையில் உதவமாட்டானா என்ற ஆதங்கம் இருந்தது.
இறுதியில் அம்மா தன் அண்ணனான மாமாவிடம் கடன் கேட்டார்.நாங்கள் குடியிருக்கும் காணியை அஇறுதியாக எழுதிக்கொடுத்து ரூபா 2000 பணம் ஏற்பாடு செய்யப்பட்டது.ஆனால் உடனடியாக அவரிடம் 2000 ரூபா கொடுக்க முடியவில்லை .1500 ரூபாவே கிடைத்தது.அது பற்குணத்தின் ஆரம்ப தேவைகளுக்கு போதுமானதாக இருந்தது.தேவையான பொருட்கள் வழங்கவும் பிரயாணத்தை ஒழுங்குகளுக்கும் போதுமானது.மீதிபணத்தை ஒரு சில நாட்களில் மாமா தருவதாக கூறினார்.
இந்த ஒழுங்குகள் செய்தது அறிந்தபின் பெரிய அண்ணன் வந்தார்.அவரைப் பொறுத்தவரை பொறுப்பை தன் தலையில் விழாமல் பாதுகாப்பதே அவரின் நோக்கம்.அண்ணன் பற்குணம் பல்கலைக் கழகம் செல்லும் நாள் வந்தது.கூடப்,போக யாரும் இல்லை.எல்லா விபரங்களையும் தானே சேகரித்து தனியாகவே போகத் தயாரானார் .அவர் அதுவரையில் கொடிகாமம் தாண்டிப் போனதில்லை.அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவும் இல்லை.
பிரயாணம் செல்லும் நாளில் மிகுதிப்பணம் மாமாவால் கொடுக்க முடியவில்லை.இரண்டு நாள் அவகாசம் கேட்டார்.அப்போது பெரிய அண்ணன் நீ இப்போது போ.நான் அந்த காசை வாங்கிக்கொண்டு வந்து தருகிறேன் என்றார்.அந்த பணம் பல்கலைக் கழக பதிவுகளுக்கு தேவையாக இருந்தது.அதற்கு ஒரு வார அவகாசமும் இருந்ததால் பற்குணம் புறப்பட்டார்.
அங்கே சென்று விடுதிகள் சம்பந்தமான ஒழுங்குகள் முடிந்த பின் பெரிய அண்ணனை எதிர்பார்த்து நின்றார்.அய்யா மாமாவிடம் பணத்தை வாங்கி அவரிடம் கொடுத்து அனுப்பினார்.ஆனால் அவரோ அந்த 500 ரூபா பணத்தை எடுத்துக்கொண்டு தன் வழியே போய்விட்டார்