ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தியின் (NPP) முக்கிய கூட்டணியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), பொதுத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி அரசமைக்கப்படும் என்ற கருத்தை நிராகரித்தது. தேசிய மக்கள் சக்தி கூட்டணி ஆட்சியை தேர்ந்தெடுக்குமா என்று டெய்லி மிரர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, நவம்பர் 14 பொதுத் தேர்தலில் அக்கட்சிக்கு (NPP) அறுதிப் பெரும்பான்மை உறுதியாக இருப்பதால், அத்தகைய தேவை ஏற்படாது என்றார்.