’பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை மூடப்படாது’

பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை எக்காரணம் கொண்டும் மூடப்பட மாட்டாது என்று, சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். தற்போதைய ஆட்சியில், பாராளுமன்ற உணவகம் மூடப்படவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் வினவிய போதே, அவர் இவ்வாறு கூறினார். பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலை  மூடப்பட மாட்டாது. ஆனால் அந்த வசதியை யாரும் துஷ்பிரயோகம் செய்யாமல் இருப்பதை அரசாங்கம் கவனித்துக்கொள்ளும் என்றாலும்,  ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.