தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், அரிசி விற்பனை நிலையம் ஒன்றை நிறுவுமாறு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால், நாட்டில் நிலவும் அரிசி நெருக்கடிக்கு குறுகிய கால மற்றும் நீண்டகால தீர்வு கிடைக்கும் என, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர் டி.எம்.எஸ்.பண்டார தெரிவித்தார்.