சமாதானத்திற்கான போரரசியல் – 6

(தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

2001இல் புதிதாக ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகளைத் தொடர்ந்தது. முன்னைய குமாரதுங்க அரசாங்கம் தொடங்கியதைத் தொடர்வதற்குப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முடிவெடுத்தார்.