முகநூல் பதிவுக்காக இளைஞர் கைது

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவரது வீட்டில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அவரது முகநூல் பதிவொன்று தொடர்பான விசாரணைக்காகவே கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவரை யாழ்ப்பாணத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளைப் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்