அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கை

பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டையிலுள்ள அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரிசி ஆலைகளிலிருந்து நாளாந்தம் விநியோகிக்கப்படும் அரிசி தொகை தொடர்பில் அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய நேற்று முதல் 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக அரிசி ஆலைகளில் சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Leave a Reply