தமிழினியின் பிறப்பிலிருந்து போராட்ட வாழ்க்கை, அவரின் தனிப்பட்ட திறமைகள், இயக்கத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகள், இறுதியில் சரணடைவு புனர்வாழ்வு, அவரின் குடும்ப பின்னணியையும் அறியக் கூடியதாக இருந்தது. இது அவர் வாழ்ந்த பெரும்பாலான வன்னி மக்களுக்கு தெரிந்தவையே.
சமாதான காலத்தில் முகமாலையிலும் ஓமந்தையிலும் சந்தேகப்படும் சாதாரண மக்களை சிறு விசாரணைக்காக அறை எண் 2க்கு போங்கோ, அறை எண் 3க்கு போங்கோ என விசாரிக்கும் புலிகளின் புலனாய்வுத் துறையின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு இராணுவ புலனாய்வு துறை அதிகாரி ஊடகவியலாளர் வேடத்தில் வன்னி பிரதேசத்தில் சுதந்திரமாக நடமாடியிருக்கிறார், புலிகளின் நிகழ்வுகளில் கலந்துகொண்டிருக்கிறார். என்பதை வாசித்த போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
இறுதிவரை வன்னியில் நிகழ்ந்த ஆழ ஊடுருவும் படையின் செயற்ப்பாட்டை புலிகளால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதனால் அவர்கள் பெரும் இழப்புக்களை சந்தித்தார்கள் என்பதும் உண்மையான அதிற்சியே.
இறுதிக்காலத்தில் பிரபாகரனின் மகனின் செயற்ப்பாடுகள், இயக்கத்திக்குள் இடம்பெற்ற கலந்துரையாடல்கள், விவாதங்கள், விமர்சனங்கள், கருத்துமோதல்கள், போராளிகளின் எதிர்பார்ப்புக்கள் என்பன இந்த நூலிலிருந்து அறியக் கூடியதாக இருந்தது.
இவை தவிர்த்து ஏனைய விடயங்கள் யாவும் வன்னி பிரதேச மக்கள் உட்பட எல்லா தமிழ் மக்களும் அறிந்து அனுபவித்த, அனுபவித்து அறிந்த விடயங்களே!!!
(Sp Suba)