வவுனியாவில் அண்மைய நாட்களை விடவும், ஞாயிற்றுக்கிழமை (22) அதிக பனிமூட்டமாகக் காணப்படுகின்றது. கடும் பனிமூட்டம் காரணமாக போக்குவரத்தை மேற்கொள்வதில் வாகன சாரதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக ஏ-9 வீதி மற்றும் மன்னார் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் ஒளியைப் பாய்ச்சியபடி சென்றமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.