ஆபிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெரு மழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கெனவே இங்கு அவதானிக்கப்பட்ட போதும், இப்போது இவற்றின் பெருக்கம் அதிகமாக உள்ளது. பயிர் பச்சைகளையெல்லாம் தின்று தீர்க்கும் இவை, உள்ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, நோய்களைப் பரப்பும் கருவிகளாகவும் செயல்படுகின்றன. இவற்றை இப்போதே கட்டுப்படுத்த தவறினால் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக அமையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.