பொது மக்களின் வினைத்திறனான பங்களிப்புடன் மாத்திரமே தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் வெற்றியடைய முடியும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் 2025 ஜனவரி 1ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிபிட்டார்.