முல்லைத்தீவு கடற்பகுதியில் கடந்த டிசம்பர் 19ஆம் திகதி மீட்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 103 ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரகுமான் ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.