சுங்கத்துறை விடுவிப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்காக இலங்கை சுங்க அதிகாரிகள் வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றுவர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கும் சுங்கத்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது