தோழர் லட்சுமி நஞ்சப்பன் மறைவு !எம் இதய அஞ்சலிகள்!!

மிக இருண்ட காலத்தில் நிர்க்கதியான காலத்தில் தோழர் நாபா தோழர்கள் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட நாட்களில் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் அறச் சீற்றம் கொண்டார்கள் .தர்மபுரியில் அவர்களது பேராளர் மாநாடு. தோழர் நஞ்சப்பன் அவரது துணைவியார் லட்சுமி ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் உறுதுணையாக நின்றார்கள்.
ஒரு மேடையில் மறைந்த உன்னத தோழர்கள் மொகித் சென் த.பாண்டியன் உட்பட வரலாறு கண்ட தோழர்கள் அருகில் நின்றார்கள். தர்மபுரியில் பேரணி ஆண்களும் பெண்களுமாக நூற்றுக்கணக்காக பேரணியில் தோழர் நாபாவின் பதாகைகளையும் அவர்கள் உயர்த்தி சென்றார்கள் பசுமையாக எம் நினைவுகளில் .தோழர்களின் படுகொலை தொடர்பாக தோழர் நஞ்சப்பனின குரல் தமிழக சட்ட சபையிலும் ஒலித்ததுமறக்கிலோம்