விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதா நேற்று விடுத்துள்ள அறிக்கையில் இலங்கைத் தமிழர்கள் பற்றியும், அதிலே தி.மு. கழகத்தின் மீது குறை கூறியும் தெரிவித்திருக்கிறார். இலங்கைத் தமிழர்கள் நலன் பற்றிப் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கு ஏதாவது தகுதி உண்டா? ஜெயலலிதா 16-4-2002 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் மறந்து விட்டதா?
மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது என்றும் தமிழகச் சட்டப் பேரவையில் 16-4-2002 அன்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியவர் ஜெயலலிதா என்பதை தமிழ்நாட்டு வாக்காளர்கள் மறந்து விட்டார்களா?