நான்காவது கட்ட ஈழப்போரின் இறுதிப்போரின்போது விடுதலைப்புலிகளே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இராணுவம் தாக்குதல் நடத்தவில்லை என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தமது கட்டுப்பாட்டில் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட மக்களின் மீது விடுதலைப்புலிகளே தாக்குதல் நடத்தினர். இந்த தகவல்களை அவர் இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று படையினர் விடுத்த வேண்டுகோளின் பின்னர் பொதுமக்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேற ஆரம்பித்தனர். முதல் கட்டமாக 50ஆயிரம் பேர் தப்பிவந்தனர். இதன்பின்னர் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே அதிகளவான மக்கள் வெளியேறினர். இந்தநிலையில் 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் திகதி 150, 000 பேர் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர்.
இதேவேளை மே 14ஆம் திகதியன்று 85ஆயிரம் பேர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியேறினர் இதனையடுத்து மே 19இல் போர் முடிவுக்கு வந்தது என்றும் பீல்ட் மார்ஷல் குறிப்பிட்டுள்ளார்.