இலங்கையில் சுமந்திரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினர். தமிழகத்தில் திருமுருகன் காந்தி யார்?

சுமந்திரன் மீது விமர்சனம் ஒருபுறம் இருக்கட்டும்.
அவரை விமர்சிக்க வேண்டியவர்கள் வாக்களித்த மக்களும் ஈழ தமிழர்களுமே! புலத்திலும், உள்நாட்டிலும் அரசியல்வாதிகளாலும்
ஊடகங்களினாலும்மோசமான விமர்சனங்களை கடந்து, மக்கள் ஆதரவினால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்.
அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.


தமிழகத்தில் திருமுருகன் காந்தி யார்?
சுமந்திரன் மீது திருமுருகன்காந்தி வைக்கும் விமர்சனத்தையும் அதேபோன்றே எடுக்க வேண்டும். என்னெனில், கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற நீயா நானா நிகழ்வில், உங்களுக்கு பிடித்த பேச்சாளர் யார்? என்று திருமுருகன்காந்தியை கேட்ட போது, பிரபாகரன் என்று பதிலளித்தார்.இதனை அந்த தொலைக்காட்சி தணிக்கை செய்தது. இதற்கு புலம் பெயர் மேதாவிகளும் தட்டச்சு போராளிகளும் கொக்கரித்தார்கள்.

அதுமட்டும் தான் அவர்களின் வேலை. உண்மையில், பிரபாகரன் பேச்சாளர் இல்லை என்று புலிகளின் பல பாடல்களே
கூறுகின்றன. உங்களுக்கு பிடித்த தலைவன் யார்? விடுதலைப்போராளி யார்? சிறந்த நிர்வாகி யார் ?என கேள்வி கேட்டிருந்தால், திருமுருகனுடைய பதில் பொருந்தியிருக்கும்.

உண்மையில் நான் கேட்கிறேன்! எந்த மேடையில் பிரபாகரன் பேசிய பேச்சு, உங்களை கவர்ந்தது. அவரது 30 வருடங்களுக்கு மேலான போரரட்ட வாழ்க்கையில் இருதடவைகளே அவர் மக்கள் முன் தோன்றி பேசியிருக்கின்றார்.

ஒன்று மானிப்பாய் சுதுமலை அம்மன் கோவில் முன்பாக,
இரண்டாவது சாவகச்சேரி மகளீர் கல்லூரியில்
இதை தவிர வருடாவருடம் மாவீரர் தின உரையில்
இந்த மூன்றிலும் அவர் எழுதிவைத்தே வாசிப்பார். இதனை ஒருபோதும் பேச்சாக கருதவே முடியாது. அதை உரையாகவோ அல்லது அவர்களின் உத்தியோகபூர்வ அறிக்கையாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனையும் தாண்டி “பேசாமல் பேசவைப்பான் பிரபாகரன்”, “அவர் மேடைகள் ஏறியதில்லை பேச்சுக்கள் நிகழ்த்தியதில்லை” என பல புலிகளின் பாடல் வரிகளே அவர் ஒரு பேச்சாளர் இல்லை என்பதற்கு சிறந்த ஆதாரம். அதி சிறந்த பேச்சாளர்கள் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழகத்தில் இருக்கும் ஒருவருக்கு, பேச்சுக்கும் உரைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஈழ அரசியல் பேசுவது………..முடிவை நீங்களே எழுதிக்கொள்ளுங்கள்

(Sp Suba)