கடந்த ஐந்து வருடங்களுக்கு ஐரோப்பிய யூனியனில், பல கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இணைந்து கொண்டது(கொள்ள பட்டது) யாவரும் அறிந்ததே. அவ்விணைவின் மூலம் திறக்க பட்ட எல்லைகளினால் இவ் ஐந்து வருடங்களுக்குள் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் இருந்து ஐக்கிய இராச்சியத்திற்குள் குடியேறியவர்கள் தொகை (+ அகதிகள் ) அண்ணளவாக 9 மில்லியன் மக்கள் வரும். இன்றைய நாட்களில் அவற்றில் அண்ணளவாக 5.5 மில்லியனுக்கு கூடுதலான மக்கள் ஐக்கிய இராச்சிய பிரசைகளாக மாறிவிட்டனர். மிகுதியாக இருப்பவர்கள் 3.5 மில்லியனுக்கு குறைவானவர்களே ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் பிரசைகளாக உள்ளனர்.
ஐரோப்பிய யூனியனில் இருந்து ஐக்கிய இராச்சியம் பிரிந்தாலும், இந்த மிகுதி 3.5 மில்லியனுக்கு குறைவானவர்களே ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் பிரசைகளை திருப்பி அவர்கள் நாடுகளுக்கு அனுப்ப முடியாது என்பது உண்மை. இதற்கு பல பின்னணி அரசியல் காரணங்கள் உள்ளன.
இங்கு வேடிக்கை என்னவென்றால், ஐக்கிய இராச்சியதில் வாழும் சில தமிழர்கள் FaceBook இல் பொங்குவதை பார்க்கும் போது கேளிக்கையாக உள்ளது. என்னவோ அவர்கள் தான் ஐக்கிய இராச்சியத்தின் பொருளாதார முதுகு எலும்பு போலவும், அத்துடன் ஐரோப்பிய யூனியனில் இருந்து சென்று ஐக்கிய இராச்சியத்தில் குடியேறியவர்களை(இதர தமிழர்கள் உட்பட) இவர்கள் தான் காவந்து செய்வது போலவும் பொங்குகின்றனர்.
>>இங்கு முக்கியமாக கவனிக்க பட வேண்டிய விடயம் என்னவெனில்; ஐக்கிய இராச்சியதில் வாழும் இலங்கையை பின்புலமாக கொண்ட தமிழர்கள் என்ன நோக்கத்தில் ஐக்கிய இராச்சியதில் சென்று குடியேறினார்களோ, அதே நோக்கத்தில் தான் ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளில் இருந்து தமிழர்கள் சென்று ஐக்கிய இராச்சியதில் குடியேறி உள்ளனர். <<
அடுத்து, மெத்த படித்த எமது பொருளாதார அறிவு சீவிகள் சொல்லுகின்றனர்; ஐக்கிய இராச்சியம் மிகவும் பலமாக உள்ளதாம். அவர்கள் எந்த அறிவை வைத்து சொல்லுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளமுடியவில்லை.
>>ஆனால், ஐக்கிய இராச்சியத்தின் வெளியேற்றம் ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்றால்,அந்தத் தாக்கங்களினால் ஐக்கிய இராச்சியத்திற்கு மேலும் மோசமான பின் விளைவுகளை பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் என்பது உண்மை.<<
>எனவே இங்கு இழக்கப்போவது யார் ..??, இழப்புகளை தாங்கும் சக்தி யாரிடம் உண்டு ..?? எவ்வகையான பெறுமதி …?? என்பன பில்லியோன் டொலர் பெறுமதிமிக்க விடைகள் <<
(Subakaran Mayilvaganam)