அமெரிக்காவிலுள்ள யூட்டா மாகாணத்தின், புரோமோன்டோரி பாலைவனப் பகுதியில், உலகின் மிகப் பெரிய ராக்கெட் உந்து இயந்திரத்தை, ‘நாசா’ நேற்று வெற்றிகரமாக பரிசோதித்தது. ‘ஆர்பிட்டல் யு.டி.கே.,’ என்ற தனியார் நிறுவனம் இந்த ராக்கெட்டை தயாரித்துள்ளது. கடந்த மார்ச், 2015ல், இதே திட எரிபொருள் ராக்கெட் இயந்திரத்தை வெப்பமூட்டிய நிலையில் வெற்றிகரமாக நாசா சோதித்தது. சமீபத்திய சோதனை மிகவும் குளிரூட்டப்பட்ட நிலையில் நடந்தது. இரு சோதனைகளுமே வெற்றி கரமாக நடந்ததால், இதுவே இறுதி சோதனை. இந்த ராக்கெட் இயந்திரத்திற்கு, 16.33 லட்சம் கிலோ உந்து சக்தி கொண்டது. செப்டம்பர் 2018ல், செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலனையும், 2025ல் மனிதர்கள் உள்ள விண்கலனை ஒரு விண்கல்லின் மீது தரையிறக்கவும், பின், 2030ல் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பவும், மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப இத்தகைய உந்து இயந்திரங்களையே நாசா பயன்படுத்தும்.