உலககம்யூனிஸ இயக்கத்தின் தோழர்களில் முக்கியதோழரான தோழர் ஃபிடல்காஸ்ட்ரோ அவர்களின் பிறந்த தினம். ஆகஸ்ட்13. உலகில் அதிகமாக கரும்பு விளையும் நாடு கியூபா ஆகையால் அதனை உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கிறோம். அந்த நாட்டில் பிறந்த அருமை தோழர் ஃபிடல் காஸ்ட்ரோ. அமெரிக்காவின் அருகில் கியூபாவை ஒரு சோசலிஸ நாடக உருவாக்கிய பெருமைக்கு சொந்தகாரர் தோழர் ஃபிடல்காஸ்ட்ரோ.
இவர் இல்லையெனில் கியூபா என்ற நாடு உலக ஏகாதிபத்தியரௌடி நாடுகளின் தலைமையகமான அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாக ஆகியிருக்கும். தோழர் ஃபிடல்காஸ்ட்ரோ ஒருபெரிய விவசாய குடும்ப வாரிசு இருந்தாலும் கியூப நாட்டின் விடுதலைக்காகவும் ஏகாதிபத்திய ஒழிப்புக்காகவும் சொத்துசுகங்களை தூக்கி எறிந்துவிட்டு கம்யூனிஸத்திற்காக போராடவந்தார்! 1941கல்லூரியில் படிக்கும் போதுதான் கம்யூனிஸம் அறிமுகமானது. ஹவானாவில் சட்டம் பயிற்ற போது முழு நேர கம்யூனிஸ்டாக மாறினார். தன் பேச்சால் கியூபா மக்களை கவர்ந்தார். அன்றைய அமெரிக்க கைகூலியாக செயல்பட்ட கியூபா அரசை எதிர்க்க மெக்ஸிக்கோ நாட்டுக்கு தப்பிசென்று அங்கு கியூபாவை மீட்க ஒரு புரட்சிகர படைஉருவாக்கினார்.
அங்குதான் தோழர் சேகுவேராவை சந்தித்தார். இருவரும் ஒன்றிணைந்து கியூப விவசாயிகள்-இளைஞர்களை ஒன்று திரண்டி போராடி கியூப நாட்டை கைப்பற்றி அந்நாட்டில் கம்யூனிஸ்ட் ஆட்சியை கொண்டுவந்தார். இதை பொறுத்து கொள்ளாத கொலைபாதக அமெரிக்க அரசு,பல்வேறு இடைஞ்சல்களுடன் கியூபா மீது பொருளாதார தடை விதித்தது. எல்லாவற்றையும் சமாளித்து கம்யூனிஸ லட்சியத்துக்காக பாடுபடும், தோழர்ஃபிடல் காஸ்ட்ரோவை 638 முறை கொல்ல முயன்று அமெரிக்கா தோற்றது.
எதை கண்டும் அஞ்சாத காஸ்ட்ரோவும் கியூப மக்களும் ஒயாமல் உழைத்தார்கள். உலக வரைபடத்தில் அமெரிக்காவின் மிக அருகில் இருந்தாலும் அமெரிக்காவால் தொடக்கூட முடியாத வகையில் கியூபா திகழ்கிறது. இதற்கெல்லாம் ஒரே காரணம் மக்களை தன் கம்யூனிஸ லட்சியத்தாலும் மக்களோடு மக்களாக பணிபுரிந்த காரணத்தாலும் கியூப நாட்டின் நம்பிக்கை நாயகனாக திகழ்கிறார். தோழர்ஃபிடல்காஸ்ட்ரோ! தோழரின் வழியில் கம்யூனிஸத்திற்காக பாடுபடுவோம். இந்தியாவில் கம்யூனிஸம் வெல்லும்!
(JeevaJeeva)