(சுகு, சமரன்)
இலங்கையின் சிங்கள தமிழ் அரசியல் தலைமைத்துவத்துவங்களிடம் பொதுவான போக்கொன்று நிலவுகிறது. தேசிய இனப் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதில் இதய சுத்தியான அக்கறைகள் இவர்களிடம் கிடையாது. விதிவிலக்குகள் இருக்கலாம். இனப்பிரச்சனை நீடித்து நிலவுவது தமது அதிகாரக் கைப்பற்றல் அரசியலுக்கு உதவும் என்பது இவர்களின் திடமான நம்பிக்கை. இந்த அற்பத்தனம் இலங்கை சமூக பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு என்றென்றும் தடையாகவே இருக்கும் – சுகு சறீதரன்
முற்றிலும் சரியான கூற்று. இலங்கை தமிழர் பிரச்சனைக்கான தீர்வு என்பதை பௌத்த சிங்கள் தேசியவாதம் என்ற கண்ணாடியூடாக பார்ப்பது அல்லது தனியாக பிரிந்து செல்லும் பிரச்சனைக்கு இதனைத் தள்ளிச் சென்று பார்ப்பது அல்லது இந்திய விஷ்தரிப்புவாதத்தின் ஒரு பாகமாக பாரத்தல் என்பது சிங்கள் பெரும்பான்மை தலைவர்கள் பலரிடமும் காணப்படும் பொதுவான போக்கு ஆகும். இதற்கு நாமும்(தமிழர் தரப்பு) சிறிதளவு காரணமாக இருந்திருக்கின்றோம்…. தொப்புள் கொடி உறவு…… சமஷ்டி (பெடரல் பார்டி)…… தனி ஈழம்…. போன்ற கோஷங்களுடனான போராட்டங்களும் காரணம். ஆயுதப் போராட்திற்கு முன்பே சிங்களத் தலைமைகளிடம் இவை இருந்தன என்பதுவும் இது அநாகரிக தர்மபால, ஜேஆர் போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்டு இன்று பலரும் காவித்திரியும் சிங்கள பௌத மாயக்கண்டாடியை சிங்களத் தலைவர்கள் பலரும் அணிந்து திரிகின்றனர் என்பது வருத்தத்திற்குரிய விடயம் இதில் இடதுசாரி?த்தலைவர்களும் இழுபட்டுப் போனது துர்ப்பாக்கிய நிலமை இன்று இலங்கையில் உள்ளது. – சமரன்