காட்டிக்கொடுத்த மாணவர்களுக்கு பரிசாக அவர்களை வீடுகளுக்கு அனுப்பி பல்கலை கழகம் செல்ல வைத்தார். இந்த மாணவர்கள் பெயரில் வேறு நபர்கள் பரீட்சை எழுதியதனாலும் திறமையான மாணவர்களை பரீட்சை எழுத விடாமல் தடுக்கப்பட்டதாலும் கல்வி அதிகாரிகளின் ஒத்துழைப்பினாலும் புலிகளின் விசுவாசிகளான மாணவர்கள் பல்கலை கழக அனுமதியை பெற்றுக்கொண்டனர்.
இப்படியான புலி ஆதரவு மாணவர்களுக்கு ; அங்குள்ள ஆசிரியர்களே பரீட்சைக்கான பேப்பர் கட்டுகளை முதல் நாளே உடைத்துக் கொண்டு போய் ; அந்த மாணவர்களுக்காக பரீட்சை எழுதி ஒப்படைத்தார்கள். இதனால் புலி ஆதரவு முட்டாள் மாணவர்கள் பல்கலைக் கழகம் மட்டுமல்ல ; வெளிநாடுகளுக்கும் சென்று உயர் கல்வி கற்க முடிந்தது. இது அந்த காலத்தில் குதிரை ஓடியதை விட கொடுமையானது. அவற்றை எதிர்க்கவோ அல்லது அதை அரசுக்கு சொல்ல கூடிய நிலையில் பரீட்சையை மேற்பார்வை செய்தோர் இருக்கவில்லை. உயிரா? கடமையா? உயிர்தானே முக்கியம். மௌனமாக கண்களை மூடிக் கொண்டார்கள்.
இப்படியான மாணவர்கள்தான் பல்கலைக் கழகங்களுக்குள் புகுந்து புலிகளாக பல்கலைக் கழக கட்டமைப்பை கட்டுப்படுத்தினார்கள். அவர்கள் பல்கலைக் கழகங்களை தமது பாதுகாப்பு அரணாகவும் ; அங்கிருந்து புலிகளின் ஊதுகுழல்களாகவும் செயல்பட்டார்கள். அத்தோடு பல்கலைக் கழக போராட்டங்களை ஒழுங்கு படுத்தி ; தலைமைத்துவமும் ஏற்றார்கள். இவர்களை எதிர்க்கும் மாணவர்களையும் – விரிவுரையாளர்களையும் வெருட்டவும் தொடங்கினார்கள். பல்கலைக் கழகங்கள் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் அப்படித்தான் இருந்தன. புலி ஆதரவு கல்வியை கூட கட்டுப்படுத்தியது. அன்றும் – இன்றும் இதன் எச்சங்கள் இலங்கை பல்கலைக் கழகங்களில் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக தமிழ் பகுதிகளில்.
வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட இதுவகையான புலி மாணவர்கள் ; வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவிலுள்ளவர்களை பாவித்து புலி ஆதரவு பரப்புரைகளை செய்து வந்தார்கள். இன்னும் செய்து வருகிறார்கள். சிலர் புலிகள் போலல்லாதவர்கள் போல முகம் காட்டிக் கொண்டு ; பொது மக்கள் போல மிக தந்திரமாக செயல்படுகிறார்கள்.
அண்மைய யாழ் பல்கலைக் கழக மாணவர் மோதலுக்கு பின்னால் இருப்போரும் இதன் மிச்ச சொச்சங்களே. இவர்களில் சிலர் தமிழ் ஊடகங்களிலும் இருக்கிறார்கள். சிலர் ஊடகங்களையும் நடத்துகிறார்கள். இவர்கள் மீன் வரும் வரை தவமிருக்கும் கொக்குகளை போன்றவர்கள்.
பிரபாகரனின் பிள்ளைகள் கூட க.பொ.த (சா.த) மற்றும் உயர்தர பரீட்சைகளில் இப்படித்தான் தேறினார்கள் என்றால் நம்புவீர்களா?
கிளிநொச்சி மகா வித்தியாலத்தில் பிரபாகரனின் பிள்ளைகளுக்கு வெளியிடங்களில் இருந்து ஆசிரியர்களை கொண்டு வந்து வகுப்பு நடத்தினார்கள். அதுவும் விசேட வகுப்புகள். அவர்களுக்கு உயர் ஊதியம். புலமை பரீட்சைகள். அதற்கு விடை எழுதியவர்கள் புலமை பெற்ற கலாநிதி ஆசிரியர்கள். இப்படி ஒரு நேர்மையற்ற செயலை தலைவர் தெரியாமலா செய்தார். இவரைத்தான் நேர்மையான தலைவர் என அப்பாவி தமிழ் சனம் நம்பியதா? இவை அத்தனையும் கிளிநொச்சி கனிஸ்டாவில் படித்தவர்களுக்கு தெரியும். இருந்தாலும் வாய் திறக்க மாட்டார்கள்.
(Ajeevan Veer)