பயிரை மேய்ந்த வேலிகள்..(4)

(கருணைகொண்ட திருமணபதிவாளர்கள்.)

2006 ஆகஸ்டில் புதிய திருமணச்சட்டத்தை புலிகள் கொண்டுவந்திருந்தாலும் சில இரக்கம் கொண்ட பிறப்பு இறப்பு பதிவாளர்கள் கட்டாயமாக கடத்தி செல்லப்படும் அபாய நிலையில் இருந்த இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உதவினர். 2006 ஜூன் மாதத்ற்கு முன்பாகவே திருமணம் நடை பெற்றதாக காட்டுவத்ற்காக தமது பதிவுகளை பின்திகதியிட்டு மேற்கொண்டிருந்தனர். இவ்வாறு 2006 நவம்பரில் மாத்திரம் கிளிநொச்சியில் 141 திருமணங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

கடத்தி செல்வதற்காக வீடுகளுக்குள் நுழையும் புலிகளிடம் தங்களது திருமணபதிவு சான்று பத்திரத்தை காட்டி தமது பிள்ளைகளை காப்பாற்றி விடலாம் எனநினைத்தனர் அவர்களின் பெற்றோர். ஆனாலும் புலிகள் விடுவதாக இல்லை. மணமான ஆண்களை எல்லைபடைக்கு செல்லுமாறு பணித்தனர். மணமான பெண்களை பிடித்துச்சென்று கர்ப்பபரிசோதனை செய்தனர். அந்தபெண கர்ப்பினியாக இல்லாமலோ அல்லது நான்கு மாதத்துக்கு குறைவான கருவை கொண்டிருந்தாலோ அந்த பெண்கள் வேறு பேச்சுக்கு இடமில்லாமல் புலிகளின் போர் பயிற்சிக்கு அனுப்பட்டனர். எல்லைபடை பயிற்சிக்கு அனுப்பபட்ட அவர்களின் கணவர்மார்களும் பிரதான் போர்பயிற்சிக்கு மாற்றப்பட்டு போராளியாக்கப்பட்டனர்.

இவ்வாறு ஒரு பரிதாபகரமான சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் நடந்தது.

கணேசபுரம் கிராமத்தில் மணமான ஒரு இளம் பெண் கடத்தி செல்லப்பட்டு அருகே இருந்த புலிகளின் டாக்டர் பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலையில் கர்ப்பபரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். இவர் மீது இரக்கம் கொண்ட வேறு ஒரு கர்ப்பிணி பெண் தனது சிறுநீரை இந்த பெண்ணிற்கு வழங்கியதன் பொருட்டு அந்த குறித்த இளம்பெண் கருகலைப்பு செய்யமுடியாத நிலையிலுள்ள கர்ப்பிணி என கூறப்பட்டமையால் புலிகளால் விடுவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அந்த பெண்ணின் விதி வேறு ஒரு கோணத்தில் விளையாடியது.

வழமைபோன்று காட்டிக்கொடுப்புகளுக்கு பெயர்பெற்ற தமிழர்களின் குணம் அந்த இளம் பெண்ணின் அயல்வீட்டுக்காரனையும் விடவில்லை. அந்த பக்கத்துவீட்டுகாரன் புலிகளுக்காக அந்த பெண்ணை உளவு பார்த்து கொடுத்த தகவலால் அந்த பெண்ணின் வீட்டினுள் நுழைந்த புலிகள் அவரை பிடித்து இழுத்து வேனில் போட்டுக்கொண்டு போய்விட்டனர். ஏமாற்றிய குற்றத்துக்காக அந்த பெண்ணுக்கு தனியான அடி உதை பரிசாக வழங்கப்பட்டு அவர் பிடித்து செல்லப்பட்டிருந்தார். மறுநாள் கிளிநொச்சி முருகன் ஆலயத்தில் கடவுளிடம் கண்ணீர் விடுவதை தவிர அந்த பெண்ணின் பெற்றோருக்கு வேறு வழியே இல்லாமல் போய்விட்டது.

இரக்கம் காட்டிய திருமணபதிவாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டும் தண்டிக்கப்பட்டதன் விளைவாக அவர்களும் சில நாட்ட்களில் கல்நெஞ்சக்காரர்களாக மாறிபோயியிருந்தனர்.

மக்களோ தங்களை காப்பாற்ற கடவுள் வரமாட்டாரா என மௌனமாக அழுதுகொண்டிருக்க விதி போடும் கணக்கை அறியாமல் புலிகள் காட்டுமிராண்டித்தனமாக மென்மேலும் ஆட்களை சந்தோசமாகவும் உற்சாகமாகவும் இரவு பகலாக பிடித்துக்கொண்டிருந்தனர்.

(தொடரும்..)

(Rajh Selvapathi)