‘மட்டக்களப்பு தமிழகம்’ என அழைக்கப்படும் வெருகல்முதல் பாணமை ஈறாக வாழும் எல்லா ஊர்மக்களும் மகிழ்வுடன் கூடிக் களித்திடும் பாடும்மீன்கள் பொழுது தமது வருடாந்த நிகழ்வினை கடந்த ஆகஸ்ட் 13 – 2016 அன்று கடும் மழைக்கு மத்தியிலும் வெகுசிறப்புடன் உற்சாகமாகக் கூடிக் கொண்டாடினர். தொடர்ச்சியாக இந்நிகழ்வினை தவறாது ஒழுங்கு செய்து நடத்தும் குழுவினர்களின் ஒன்றுபட்ட கூட்டான முயற்சியே இந்த வெற்றி.
2002 ஆம் ஆண்டில் நாங்கள் ஐந்துபேர் இணைந்து நமது கிழக்கிலங்கை மக்களின் ஒன்று கூடலுக்காக பாடும்மீன்கள் பொழுது என்ற அமைப்பினை உருவாக்கினோம். இன்று அது ஆலமரமாக வளர்ந்து பலநூறுமக்களை ஒரே இடத்தில் ஒன்றாக கூடும் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாக விரிந்துள்ளது.
13வருடங்களாக மண்ணின் மைந்தர்கள் என்ற பெருமையுடன் இந்நிகழ்வில் தவறாது ஒவ்வொருவருடமும் கலந்து சிறப்பிக்கும் மக்களை நாம் மறவாது பதிவு செய்து வந்துள்ளோம். அந்தவகையில் இவ்வருடமும் எம்மோடு தோழோடு தோழ் கொடுத்து பங்காற்றிய எம்உறவுகள் அனைவருக்கும் சிறப்பாக அன்பளிப்புகளை வழங்கியவர்கள் மற்றும் அனுசரணையாளர்களுக்கும் பாடும்மீன்கள் சார்பாக மனம் நிறைந்த நன்றிகள்.
(அஜந்தா ஞானமுத்து)