விடுதலைப் புலிகளே வன்முறைகளை ஆரம்பித்தனர் என்ற அடிப்படையிலேயே யுத்த குற்ற விசாரணைகள் ஆரம்பமாகவேண்டும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
யுத்த குற்றங்கள் குறித்து ஏற்கனவே நடைமுறையில் உள்ள நீதி முறைமையின் கீழ் விசாரணைகள் இடம்பெற வேண்டும் உள்நாட்டு நிபுணர்களாலேயே இந்த விசாரணைகள் இடம்பெற வேண்டும், படையினரின் கௌரவம் பாதுகாக்கப்படுகின்ற வகையிலும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்ற வகையிலும் இந்த விசாரணைகள் அமையவேண்டும், இந்த விடயம் குறித்து தேசிய கருத்தொற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும், இறுதிமுடிவை பாராளுமன்றே எடுக்கவேண்டும், விடுதலைப் புலிகளே வன்முறைகளை ஆரம்பித்தனர் என்ற அடிப்படையிலேயே விசாரணைகள் இடம்பெற வேண்டும்,
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்வைத்து கலப்புநீதிமன்றத்தை நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.