ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டிருக்கும் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்திருப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராட்டியுள்ளது. பொதுநலவாய நீதிபதிகள், சட்டத்தரணிகள், விசாரணை யாளர்கள் மற்றும் எதிர்த்தரப்பு விசாரணையாளர்களை உள்ளடக்கிய நீதிப் பொறி முறையொன்றை இலங் கையில் உருவாக்கி சர்வதேச குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரிக்க வேண்டும் என பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது இலங்கையின் நீதிக்கு கிடைத்த வெற்றியென்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. நல்லிணக்கம் என்ற நீண்டபயணத்தை ஆரம்பிப்பதற்கான பலமான சூழலை ஏற்படுத்தும் தொடக்கப் புள்ளியாக அமையும் என்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பு இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.