யாழ் உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் ஷிரானிமில் அவர்களை திடீரென தென்னிந்திய திருச்சபையின் ஆயர் தியாகராஜா அவர்கள் சில அரசியல் நரிகளின் உதவியுடன் இடமாற்றம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தார் .அதற்கான காரணங்களை ஊடகங்களில் தெளிவாக அவர் குறிப்பிட தவறியிருந்த போதும் எமது புலனாய்வு ஊடகவியலாளர்களின் முயற்சியில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.
யாழ் உடுவில் மகளிர் கல்லூரிக்கு மாதம் தோறும் அமெரிக்க தென்னிந்திய திருச்சபையில் இருந்து 3 கோடி ரூபா பணம் வருகிறது .அதில் பாடசாலை செலவுகள் போக மீதியான பணத்தை பாடசாலை கணக்கில் அதிபர் ஷிரானிமில் சேமித்து வைத்துள்ளார் .
அந்த பணத்தை யாழில் தென்னிந்திய திருச்சபை தேவாலயங்கள் கட்டுவதற்கு தரும்படி ஆயர் தியாகராஜா அவர்கள் கேட்ட போது அவர் அது பாடசாலை பணம் அதை தேவாலயங்கள் கட்டுமான பணிகளுக்கு தர முடியாது என மறுத்தமையே ஷிரானிமில் அவர்களின் இடமாற்றத்திற்கு பிரதான காரணம் .
வரும் திங்கள் கிழமை வரை பாடசாலை நடைபெறாது என அறிவிக்கப்பட போதும் திடீரென உள் நுழைந்த புதிய அதிபர் தன அயாராகத்தில் பாடசாலையை ஆரம்பித்துள்ளார் .இதன் போது ஆர்ப்பாடுடத்தில் ஈடுபடடார்கள் என்ற குற்றச்ச்சாட்டின் பேரில் 3 மாணவியர்களி புதிய அதிபர் அடித்தமையால் அவர்கள் பாடசாலையை விட்டு வெளியே ஓடி வந்தனர் .இதனால் அவ் மூவரில் ஒருவரை அவரது தாயார் அழைத்து சென்ற போதும் மற்றைய இருவரும் நீதிபதி இளஞ்செழியனை சந்திக்க சென்றனர்.
நீதிபதி இளஞ்செழியனின் வழிகாட்டலினால் மாணவியர்கள் மல்லாகம் நீதிமன்ற நீதிபதி யூட்சன் அவர்களை சந்தித்து முறைப்பாடுகளை செய்தனர் .அவரும் தான் நேரடியாக பாடசாலைக்கு விஜயம் மேற்கொள்வதாக கூறி அந்த மாணவியரை அனுப்பியுள்ளார் .
அவரது வரவை எதிர் பார்த்து பாடசாலை சமூகமே காத்திருக்கிறது .
அந்த 2 மாணவியரும் பாடசாலைக்குள் நுழைய முற்பட்ட போது அங்கே குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை மட்டுமன்றி வேறு யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கவுமில்லை .
இந்த அதிகாரம் போஸாருக்கு நிச்சயமாய் ஒரு தமிழ் அரசியல் மேதாவியினால் வழங்கப்பட்டிருக்க வேண்டும் அந்த கறுப்பாடு யார் ?
(Yarl Today)