உடுவில் மகளிர் கல்லூரியில் கடந்த 3 ஆம் திகதி முதல் மாணவிகள் மற்றும் நிர்வாகத்துக்கும் இடையில் நிலவிய முரண்பாடு, இன்று (08) முடிவுக்கு வந்ததுள்ளது. ‘நான் விட்டுக்கொடுக்கிறேன், எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக எனது அனைத்துக் கடமைகளையும் ஒப்படைப்படைக்கிறேன்’ என முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் அறிவித்ததையடுத்து, பிரச்சினை முடிவுக்கு வந்தது.
திங்கட்கிழமை (12) விடுமுறை என்பதால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) முதல் பாடசாலையின் கல்விச் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. பிரச்சினை உச்சக்கட்டத்தை அடைந்தமையால், பாடசாலைக்குச் சென்ற மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.யூட்சன், ஆளுநர் சபையைச் சேர்ந்த நிர்வாகிகள், முன்னாள் அதிபர் மற்றும் மாணவிகளுடன் கலந்துரையாடி பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
உடுவில் மகளிர் கல்லூரியின் புதிய அதிபராக தென்னிந்திய திருச் சபையால் நியமிக்கப்பட்ட பற்ரீசியா சுனித்தா, நேற்றுப் புதன்கிழமை (07) தனது பதவியை பெறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
60 வயது பூர்த்தியாகியமையால் உடுவில் மகளிர் கல்லூரியின் முன்னைய அதிபர் சிரானி மில்ஸை பாடசாலையின் ஆளுநர் சபை (தென்னிந்தியத் திருச்சபை) நீக்கியது. ஆனால், அவரைத் தொடர்ந்தும் அதிபராக கடமையாற்ற அனுமதிக்குமாறு கோரி பாடசாலையின் மாணவிகள் கடந்த 3 ஆம் திகதி முதல் போராட்டம் செய்து, தங்கள் போராட்டத்தை கடந்த 6 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றியிருந்தனர்.