பயிரை மேய்ந்த வேலிகள்.

புலிகள் செய்திருக்க கூடாத மாபெரும் தவறாகவே அவர்களின் கட்டாய ஆட்சேர்ப்பை நான் கருதுவதால் இந்ததொடரில் இந்த கட்டாய ஆட்சேர்ப்பு என்கின்ற பெயரில் அவர்கள் யாருடைய விடுதலைக்காக போராடுவதாக கூறினார்களோ அவர்கள் மீதே கட்டவிழ்த்துவிட்ட வன்கொடுமையையும் , அடக்குமுறையையும் இதுவரை எழுதியுள்ளேன்.


அத்துடன் தமது தவறை சுயபரிசீலனைக்கு உட்படுத்துவதற்காக புலிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்காகவும் இத்தொடரை சமர்ப்பிப்பதுடன், அவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை மனசாட்சியுள்ள மக்களிடம் கோருவதாகவும் இத்தொடரை வழங்கியிருந்தேன்.

இத்தொடர் கசப்பான சம்பங்களை மறக்க முயற்சிப்பவர்களிடத்தில் வேதனையை மீண்டும் கிளறிவிட்டதையும் புலிகளின் தீவிர அபிமாணிகளை மனவருத்தமடையவும் செய்துள்ளது. உங்கள் அனைவரினதும் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ளவும் முடிகின்றது.

கடுமையான ஆட்சேர்ப்பு காலப்பகுதியில் நடந்த ஏனைய முக்கிய சம்பவங்களான,
1.இளைஞர்கள் தப்பிக்க உதவிய வைத்தியர்கள்.
2.கட்டாய ஆள்பிடிப்பாளர்களால் செய்யப்பட்ட பாலியல் சேட்டைகள், வன்கொடுமைகள், சதிராட்டங்கள்
3. மக்கள் படை, எல்லைப்படை, துனைப்படை,கிராமிய படை தொல்லைகள்
4.அன்பு முகாம் கொடுமைகள்
5. பணம், பாலியல் இலஞ்சம் பெற்றுக்கொண்டு இளைஞர்களை தப்பிக்கவிட்ட புலிப்பொறுப்பாளர்கள்.
6.கிளிநொச்சியில் இருந்து ஐ.நா வெளியேற்றத்தின் போதும் அதன்பின்பு நடந்தவை.
7. ஐ.நாவின் வெளியேற்றத்துடன் முற்றுமுழுதாகவே புலிகளின் கைகளில் சிக்கிக்கொண்டவர்கள், 2009மே வரை எதிர்கொண்ட வன்கொடுமைகள்.
என ”பயிரை மேய்ந்த வேலிகள்” தொடரில் இதுவரை சொல்லப்படாத விடையங்கள் முடிவில்லாமல் தொடருவதாலும் சிலர் இதனை வேறு விதத்தில் வெளிக்கொண்டுவர முயன்றுள்ளதனாலும் இன்றுடன் இங்கு முக நூலில் தொடர்ந்து எழுதுவதை நிறுத்திவிடலாம் என நினைக்கின்றேன்
முகநூல் சுவாரஸ்யத்துக்காக மிக சுருக்கமாகவே 32 பகுதிகளையும் இதுவரை எழுதியுள்ளேன். இவற்றினை விரிவாகவும் மேற்குறிப்பிட்ட இதுவரை எழுதப்படாதவற்றையும் அவர்களுக்காக எழுதலாம் எனவும் நினைக்கின்றேன்.
நன்றி
Rajh Selvapathi