எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி யாழ் குடாநாட்டு மக்கள் அனைவரையும் யாழ் முற்றவெளி நோக்கி அணி திரளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்……. (கணொளியைக் காண…….) – Suresh Prmanchandran
ஐயா நீங்கள் தமிழ் கலாச்சாரம் காக்கவா போராடுகிறீர்கள் ? எனில் ஏன் திருகேதீஸ்வர தீர்த்தத்தில் மாத சிலை வைத்து ஆக்கரமிப்பு செய்த பொழுது நீங்கள் குரல் கொடுக்கவில்லை ?
தமிழ் கலாச்சாரம் கெடுகிறது என்று நீங்கள் போராட்டம் செய்கிறார்களா அல்லது சிங்கள கலாச்சாரம் வர கூடாது மேற்கத்தைய கலாச்சாரம் வேண்டும் என்று போராடுகிறீர்களா என்பது புரியாமல் இருக்கிறது இதனை நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்..
10 விகாரைகள் வடக்கில் வந்தால் அது சிங்கள மயமாக்களின் திட்டமிட்ட நீண்டகால வேலைப்பாடு என்கிறீர்கள் 1000க்கும் அதிகமான தேவாலயங்கள் வந்துள்ளன கட்டப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன அவ்வளவு ஏன் 5000 வருடம் வரலாறு கொண்ட ஆலயம் கூட நசுக்கப்படுகிறது இது பற்றி எழுக தமிழில் உள்வாங்கப்படாதது ஏன் ??
கிளிநொ்சியில் மட்டும் 17 பள்ளிவாசல்கள் (2014வரை) புதிதாக எழுந்துள்ளது இதனை பற்றியும் நீங்கள் இதுவரை பேசவில்லையே ஏன் ?? தமிழ் கலாச்சாரத்தை சிங்கள கலாச்சாரம் மட்டுமே அழிக்கும் மற்றையவை அழிக்காது என்பது போன்ற செயற்பாட்டின் பின்னணி என்னவென்றும் விளங்கப்படுத்த வேண்டும்.
குறிப்பாக மன்னார் ஆயரால் திருக்கேதீஸ்வர தீர்த்தம் அபகரிக்கப்பட்டு வழக்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கும் பொழுது பௌத்த மயமாக்கல் என பிரச்சாரம் செய்வதற்கான காரணம் மிஷனெரிகளின் செயல்களை தமிழர்கள் அறியாத வண்ணம் பார்த்துக்கொள்ளவும் சிங்கள பிரச்சாரத்தை செய்து உங்கள் இருப்பை தக்கவைக்கும் செயல்பாடு என்று நாங்கள் நினைப்பதில் பிழை ஏதும் இல்லையே..
பின்னூட்டத்தை அழிக்காமல் எனது சந்தேகங்களுக்கு விடை அளிப்பீர்கள் என்று நம்புகிறேன் ..
(Vinoth Balachandran)