சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 18.09.2016 (ஞாயிறு) பி.ப. 3.30 மணியளவில் இல. 62, கே.கே.எஸ். வீதி, கொக்குவில் சந்தி என்ற முகவரியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர்கூடத்தில் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவர் திரு க. ஆனந்தகுமாரசுவாமி அவர்களுடைய தலைமையில் இடம்பெறவுள்ளது.
சமூகத்தில் இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு எதிராகக் குரல்கொடுத்து வருகின்ற, அவ் அநீதிகளைச் சமூகத்திலிருந்து அகற்றுவதற்காகப் பாடுபட்டு வருகின்ற சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடிச் செயற்படுவதற்காக பொது நலனில் அக்கறையுள்ள அனைவரையும் இப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் கேட்டுக்கொள்கின்றனர்.
சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு – யாழ்ப்பாணம்